திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (17:02 IST)

ஜெய் பீம் சென்ஸார் மற்றும் ரன்னிங் டைம் அப்டேட்!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படத்தின் சென்சார் மற்றும் ஓடும் நேரம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிம்நாட்டில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு திரைப்படங்கள் ஓடிடியிலேயே வெளியாகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த பொன்மகள் வந்தாள், சூரரை போற்று உள்ளிட்ட படங்கள் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது சூர்யா நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள ஜெய்பீம் திரைப்படமும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சென்ஸார் தகவல் இப்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் 164 நிமிடம் ஓடும் படமாக உருவாகியுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.