1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2017 (15:36 IST)

5000 பேரின் உழைப்புதான் பிரம்மாண்டத்துக்கு காரணமாம்…

நேற்று வெளியான ‘பாகுபலி-2’ படத்துக்கு, கிட்டத்தட்ட 5000 பேர் வரை கிராஃபிக்ஸ் பணிகளில் ஈடுபட்டனர் என்கிறார்கள்.

 
 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உலகம் முழுவதும் நேற்று வெளியான படம் ‘பாகுபலி-2’. பிரம்மாண்டத்தின் உச்சம் என்று  சொல்லக்கூடிய வகையில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. முதல் நாள் படம் பார்த்த அனைவருமே, படத்தின் விஷுவலைத்தான் மாய்ந்து மாய்ந்து வியந்து போகிறார்கள். 
 
இந்தப் படத்தின் எண்ட் கார்டைப் பார்த்தால், கிட்டத்தட்ட 50 நிறுவனங்கள் கிராஃபிக்ஸ் பணிகளை மேற்கொண்டிருக்கின்றன. ஒரு நிறுவனத்துக்கு 100 பேர் என்று வைத்துக் கொண்டால் கூட, ஏறத்தாழ 5000 பேர் உழைத்திருக்கிறார்கள். அவர்களின்  உழைப்புத்தான் இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக, யாரும் குறைசொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.