திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (20:49 IST)

ஐஸ்வர்யா ராஜேஷை ஏமாற்றிய இரண்டு பேர்...

தான் இதுவரை இரண்டு பேரைக் காதலித்துள்ளதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

 
காதலர் தினத்தை முன்னிட்டு, இதுவரை தான் இரண்டு பேரைக் காதலித்துள்ளேன் என ஓப்பனாகத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். “11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு பையனைக் காதலித்தேன். அவன் என்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டான். அதை நினைத்து அவன் இப்போது வருத்தப்படுவான் என்று நினைக்கிறேன்.
 
அதன்பிறகு கல்லூரியில் ஒரு பையனைக் காதலித்தேன். ஐந்தாறு வருடங்களாக இருவரும் காதலித்தோம். ஆனால், போகப்போக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் வரத் தொடங்கின. அதுவும் நான் சினிமாவுக்கு வந்தபிறகு கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. எனவே, இருவரும் பிரிந்துவிட்டோம்.
 
இந்த இரண்டு காதல்கள் தான் இதுவரை என் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன. அதன்பிறகு எந்தக் காதலும் இல்லை. மூன்றாவது காதலாவது நிலைத்து நிற்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.