ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 20 மே 2023 (06:40 IST)

அடுத்த படத்தில் விஜய்க்கு இவ்வளவு சம்பளமா?... யாருப்பா கெளப்பி விட்டது?

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இப்போது சென்னையில் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. ஜூலை மாதத்துக்குள் மொத்த ஷூட்டிங்கும் முடிவடையும் என சொல்லப்படுகிறது. இதனால் விஜய்யின் அடுத்த படம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில் இப்போது திடீரென விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, இந்த படம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் இதன் ஷூட்டிங் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் வெங்கட் பிரபு விஜய்யை சந்தித்து கதையை சொல்லி சம்மதம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஒரு குறுகிய கால படமாக உருவாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை பற்றி ஒரு வதந்தி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அது என்னவென்றால் படத்தில் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதுதான். ஆனால் அவ்வளவு பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்து லாபம் பார்க்கும் அளவுக்கு இன்னும் தமிழ் சினிமாவில் எந்த நடிகருக்குமே மார்கெட் இல்லை என்று சொல்லப்படுகிறது.