1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2020 (12:32 IST)

முதல் நாளே ஷிவானியை கடுப்பேற்றிய போட்டியாளர்கள்: வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில் முதல் நாள் பிரமாண்டமாக கலை நிகழ்ச்சியுடன் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்

இதனையடுத்து இன்று காலை வெளியான முதல் புரமோ வீடியோவில், 16 போட்டியாளர்களும் ஒற்றுமையுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் முதல் நாளை ஆரம்பித்தனர். இந்த நிலையில் சற்று முன் வெளியான இரண்டாவது புரமோ வீடியோவில் ஷிவானி நாராயணனை போட்டியாளர்கள் கார்னர் செய்வது போல் தெரிகிறது 

நேற்றைய முதல் நாளிலேயே அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் மற்ற போட்டியாளர்களை போல கலகலப்பாக இல்லாமல் அவர் மட்டும் வித்தியாசமாக தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருந்தது இருந்தது 

இந்த நிலையில் இன்று வெளியான 2வது புரமோவில் போட்டியாளர்கள் சிலர் கார்னர் செய்ய ஷிவானி ஒரு கட்டத்தில் கடுப்பாகி ’இந்த வீட்டில் எனக்கு பேச உரிமை இல்லையா? அப்படி உரிமை இல்லை என்றால் நான் பேசவில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது