திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (10:02 IST)

உடல் நல பாதிப்பால் வெப் தொடரில் இருந்து விலகினாரா சமந்தா?

சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது.

அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்ததனர். இதில் அதிகமாக தமிழ் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது சமந்தாவும் விஜய் சேதுபதியும்தான். ராஜ் மற்றும் டி கே இயக்கத்தில் அடுத்து ஒரு வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது சமந்தா ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடித்து வந்தார். ஆனால் இப்போது அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வெப் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை படக்குழு மறுத்துள்ளது.

மேலும் விரைவில் இந்த சீரிஸின் ஷூட்டிங்கில் சமந்தா பங்கெடுப்பார் என்று சொல்லப்படுகிறது.