வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (10:28 IST)

பிரபல பாலிவுட் இயக்குனரைக் காதலிக்கிறாரா சமந்தா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த சில ஆண்டுகளாக மையோசிட்டீஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

அதே போல அவரது குடும்ப வாழ்க்கையும் கடந்த சில ஆண்டுகளில் பிரச்சனைகளில் சிக்கியது. அவரது காதல் கணவரான நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த பரபரப்புகள் சற்றுத் தணிந்துள்ள நிலையில் பாலிவுட் இயக்குனரான ராஜ் என்பவரை சமந்தா காதலிப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் புகழ்பெற்ற பேமிலி மேன் மற்றும் சிட்டாடல் ஆகிய தொடர்களின் இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கிய பேமிலி மேன் 2 சீசனிலும், தற்போது இயக்கி வரும் சிட்டாடல் தொடரிலும் சமந்தா முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தி ஊடகங்களில் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், அதற்காக ராஜ் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

சமீபத்தில்தான் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதா ஆகியோருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.