கதைத்திருட்டு விவகாரம்: விஜய் எடுத்த அதிரடி முடிவு
விஜய் நடிக்கும் படம் என்றாலே ரிலீசின்போது பிரச்சனை ஏற்படுவது வழக்கம். ஆனால் அவை எல்லாமே விஜய்யை குறிவைத்து மட்டுமே இருக்கும். ஆனால் 'சர்கார்' படத்தின் கதைத்திருட்டு விவகாரத்தில் யாருமே விஜய்யை குறை சொல்லவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் மீதே மொத்த விமர்சனமும் விழுந்து வருகிறது.
இந்த நிலையில் இனிமேல் கதை சொல்ல வருகிறேன் என்று யாராவது கேட்டால் அவர்களை உள்ளே நுழையவிட வேண்டாம் என்று விஜய் கூறிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கதை அல்லது வெற்றி பெற்ற பிற மொழி படங்களை இயக்குவதாக கூறுபவர்கள் மட்டுமே இனி விஜய்யை அணுக முடியும் என்று கூறப்படுகிறது.
விஜய்யின் இந்த முடிவை கோலிவுட்டில் பெரிய நடிகர்களும் பின்பற்ற முடிவு செய்துவிட்டார்களாம். மேலும் 'சர்கார்' படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் பெயர் கொஞ்சம் அதிகமாகவே டேமேஜ் ஆகிவிட்டதால் இனி மீண்டும் விஜய்-முருகதாஸ் கூட்டணி இருக்காது என்றே விபரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர்.