சமாதானமாகும் சண்டக்கோழிகள்

சமாதானமாகும் சண்டக்கோழிகள்


Sasikala| Last Modified செவ்வாய், 7 ஜூன் 2016 (12:47 IST)
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவதாக இருந்து, லிங்குசாமி சொல்லாமல் கொள்ளாமல் அல்லு அர்ஜுனின் தெலுங்குப் படத்தை இயக்கச் சென்றதால், சண்டக்கோழி 2 ட்ராப் என்று ட்விட்டரில் கடுப்படித்தார் விஷால்.

 


லிங்குவும், விஷாலும் எதிரெதிராக இருப்பதால் சண்டக்கோழி 2 டேக் ஆஃப் ஆகாது என்றே நினைத்திருந்தனர்.
 
இந்நிலையில், சண்டக்கோழி 2 படத்தை எடுக்க திருப்பதி பிரதர்ஸ் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது.
 
அல்லு அர்ஜுன் படத்தை இயக்கிக் கொண்டே, சண்டக்கோழி 2 படத்தையும் லிங்குசாமி இயக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் உலவுகிறது. விரைவில் இது குறித்த மகிழ்ச்சியான தகவலை எதிர்பார்க்கலாம்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....


இதில் மேலும் படிக்கவும் :