விக்னேஷ் சிவன் & பிரதீப் படத்தில் நயன்தாராவும் இருக்காரா? லேட்டஸ்ட் தகவல்!
அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க,விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்துக்காக விக்னேஷ் சிவன் உருவாக்கிய திரைக்கதை லைகா மற்றும் அஜித் தரப்புக்கு பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் அந்த படத்தில் இருந்து அவரை நீக்கி மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்து ப்ரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தை எப்படியாவது ஹிட் ஆக்கிவிட வேண்டும் என விக்னேஷ் சிவன் உறுதியாக வேலைகள் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாராவையும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் பட்ஜெட் எக்கச்சக்கமாக எகிறி உள்ளதாக சொல்லப்படுகிறது.