1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. H Vinoth talked about valimai plot

வலிமை முதல்பாதி, இரண்டாம் பாதி எப்படி இருக்கும்? இயக்குனர் பேட்டி!

வலிமை
வலிமை படம் எப்படி இருக்கும் என்பது குறித்து இயக்குனர் ஹெச் வினோத் பேட்டியளித்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைமை சரியானதும் படத்தை மூன்று மொழிகளில் வெளியிட படக்குழு தயாராக உள்ளது.

இதற்கிடையில் படத்தை பற்றி பேசியுள்ள இயக்குனர் ஹெச் வினோத் ‘வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை நமக்காக ஹீரோ அஜித்குமார் சமாளிப்பதுதான் வலிமை படத்தின் கதை.’ என்று கூறியுள்ளார். மேலும் முதல்பாதியில் ஆக்‌ஷன் மற்றும் விசாரணைக் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்றும் இரண்டாம் பாதியில் செண்ட்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
சூர்யா படம் பின்வாங்கிய தேதியில் ரிலீஸ் ஆகும் விஷால் படம்!