திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (09:39 IST)

விஜய்யின் லியோ படத்தில் நடிக்கிறாரா லெஜண்ட் சரவணன்… திடீரென்று பரவிவரும் தகவல்!

விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர்.

படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு முன்பாகவே பேக்கப் செய்துவிட்டு சென்னைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது சமூகவலைதளங்களில் விஜய்யின் லியோ படத்தில் தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான லெஜண்ட் சரவணன் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்குக் காரணம் சமீபத்தில் காஷ்மீர் சென்றுள்ள அவர் அங்கிருந்து வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான். அதைப் பகிர்ந்துள்ள அவரின் PRO விரைவில் அப்டேட்கள் வெளிவரும் என்று தெரிவித்திருந்தார். இதைவைத்து லெஜண்ட் சரவணன் லியோ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்களை ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.