வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2020 (10:40 IST)

போதைப் பொருள் பயன்பாடு…. வாட்ஸ் ஆப் குருப்புக்கு அட்மினாக இருந்தாரா தீபிகா படுகோன்?

பாலிவுட்டில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள போதை பொருள் பயன்பாடு குறித்து இப்போது விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் முன்னணி நடிகை தீபிகா படுகோன் பெயரும் அடிபடுகிறது.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது காதலி ரியா கைது செய்யப்பட்டுள்ளார். ரியா சுஷாந்திற்கு போதை பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட விசாரணையில் மேலும் பல பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பல முன்னணி நடிகர், நடிகைகள் பெயர் அடிப்படும் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ஷ்ரதா கபூருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சுஷாந்த் சிங்குடன் “சிச்சோரே” என்ற படத்தில் நடித்தவர் ஷ்ரதா கபூர். சுஷாந்தின் விருந்தினர் இல்லத்தில் போதை பார்ட்டிகள் நடைபெற்றதாகவும், அதில் ஷ்ரதா கபூரும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் மேலும் தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகைகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள் பயன்பாடு பற்றிப் பேசிக்கொள்ள உருவாக்கப்பட்ட வாட்ஸ் ஆப் குருப்புக்கு அட்மினாக தீபிகா படுகோன்தான் இருந்தார் என சொல்லப்படுகிறது.