1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (13:16 IST)

அதிதி ஷங்கர் எனக்கு கிடைத்த அக்கா: ‘பிகில்’ நடிகையின் பதிவு

இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் எனக்கு வேறொரு அம்மாவிடம் இருந்து கிடைத்த அக்கா என பிகில் நடிகை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடிக்கும் ’விருமன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் உருவான இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிகில் படத்தில் நடித்தவரும் நடிகை ரோபோ சங்கரின் மகளுமான இந்திரஜா நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அதிதி ஷங்கர் உடன் தனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது என்றும் அவர் எனக்கு கிடைத்த வேறொரு அம்மாவுக்கு பிறந்த அக்கா என்றும் தனது சமூக வலைத்தளத்தில் ஒழுக்கமாக பதிவு செய்துள்ளார்
 
இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பிரமாண்ட இயக்குனரின் மகள் என்ற எண்ணமே இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாக பழகியதைப் பார்த்தால் ஆச்சரியம் அடைந்ததாகவும் இந்திரஜா  கூறியுள்ளார்