ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2024 (15:47 IST)

'இந்தியன்’ படத்தில் கமல் ஜோடியாக நடித்த நடிகை விவாகரத்து மனு.. என்ன நடந்தது?

கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த நடிகை, தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியான நிலையில், இந்த படத்தின் நாயகிகளாக மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இதில், நடிகை ஊர்மிளா தனது கணவரை விவாகரத்து செய்ய போவதாக கூறப்படுகிறது. 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு, நடிகை ஊர்மிளா தொழிலதிபர் மொஹ்சின் அக்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், ஊர்மிளாவுக்கும் அவருடைய கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
ஊர்மிளாவுக்கு 50 வயதாகும் நிலையில், அவர் கணவர் மொஹ்சின், 10 வயது குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்தின் போது 10 வருட இடைவெளி விவாத பொருளாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், ஊர்மிளா தாக்கல் செய்த விவாகரத்து மனு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என அவரது கணவர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியானது
 
Edited by Siva