1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2023 (15:39 IST)

சென்னையில் நாளை தொடங்கும் இந்தியன் 2 அடுத்த கட்ட ஷுட்!

இந்தியன் 2 ஷூட்டிங் கடந்த வாரங்களில் திருப்பதியில் நடந்து வந்தது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “RC 15” படத்தையும் இயக்கி வருகிறார். ஷங்கர் தன் திரை வாழ்க்கையில் முதல் முறையாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

கடந்த வாரங்களில் திருப்பதியில் இந்தியன் 2 ஷூட்டிங் நாளை முதல் சென்னை பனையூரில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.