வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 30 மே 2024 (18:56 IST)

’இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஜூன் ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.