1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2017 (16:11 IST)

ஸ்டெல்லா படத்தில் 7 வேடங்களில் சுருதி ஹரிஹரன்

வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஸ்டெல்லா’. இப்படத்தில் சுருதி ஹரிஹரன் 7 வேடங்களில் நடித்து வருவதாக சமீபத்தில் ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

 
கன்னட நடிகையான சுருதி ஹரிஹரன், தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன், சோலோஆகிய படங்களில்  நடித்திருக்கிறார். தற்போது ‘ரா ரா ராஜசேகர்’ படத்தில் நடித்து வருகிறார்.
 
இப்படம் சைன்டிபிக் திரில்லர் கதையாக கன்னடத்தில் தயாராகிறது. 7 வேடங்களில் நடிப்பதற்காக என்னை தயார்படுத்திவருகிறேன். எனக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் இது புதிய அனுபவமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
 
இந்த படத்தின் 7 தோற்றங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட சுருதி ஹரிஹரன் திட்டமிட்டுள்ளார். இவர் தற்போது கலாத்மிகா என்ற பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் மூலம் ‘ஸ்டெல்லா’ படத்தை தயாரிக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.