வாழ்த்து மழையில் நனையும் நிவின் பாலி

Cauveri Manickam| Last Modified சனி, 22 ஏப்ரல் 2017 (12:45 IST)
நிவின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘சஹாவு’ படத்தைப் பார்த்துவிட்டு, ஏகப்பட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து  தெரிவித்துள்ளனர்.

 
தேசிய விருது பெற்ற இயக்குநர் சித்தார்த்தா சிவா இயக்கியுள்ள படம் ‘சஹாவு’. கிருஷ்ண குமார் மற்றும் சஹாவு  கிருஷ்ணன் என இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார் நிவின் பாலி. ஹீரோயினாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அரசியல்  சம்பந்தப்பட்ட இந்தப் படத்தில், ரொமான்ஸ் மற்றும் காமெடிக்கும் சரிபாதி முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 
 
இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் மற்றும் நடிகரான வினித் ஸ்ரீநிவாசன், “நான் இயக்கிய நான்கு படங்களில், மூன்றில் நிவின்  பாலி தான் ஹீரோ. அப்போதெல்லாம் அவர் ஒரு நடிகனாகத்தான் எனக்குத் தெரிந்தார். ஆனால், ‘சஹாவு’ படத்தில்தான் அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டார்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :