சின்னத்திரையில் மக்கள் பிரச்சனைகளை அலசும் கேப்டன் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கேப்டன் டிவியில் வரும் ஜூன் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணியளவில் நேர்க்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் தற்போது அரசியல் நிலவரங்கள் குறித்தும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், மக்கள் பிரச்சனைகள் குறித்தும் விளக்கம் அளிக்கிறார். தொடர்ந்து தனியார் பால் நிறுவங்களின் கலப்படம் பற்றியும், மத்திய பாஜக ஆட்சியின் மூன்றாண்டு செயல்பாடுகள் பற்றியும், இறைச்சிக்காக மாட்டுகள் வெட்டபடுவதற்கு தடை உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கவிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் பல்வேறு துறைகளைச்சார்ந்த பிரபலங்கள் மற்றும் சாதனையாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியை நெறியாளர் ப.ஆசைத்தம்பி தொகுத்து வழங்குகிறார்.