ரம்ஜானில் மோதும் அஜித், சல்மான், மகேஷ்பாபு?

Sasikala| Last Updated: செவ்வாய், 31 ஜனவரி 2017 (15:28 IST)
ஜுன் மாதம் 23 -ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு மூன்று முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக  கூறப்படுகிறது.

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தை ஜுன் 23 ரம்ஜானை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். சல்மான்கானின்  ட்யூப் லைட் படத்தையும் ரம்ஜானை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன.
 
அதேபோல் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் மகேஷ்பாபு நடிக்கும் படத்தையும் ஜுன் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆக, இந்த ரம்ஜானில் அனல் பறக்க வாய்ப்புள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :