திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2018 (21:37 IST)

ராஜா ரங்குஸ்கி படத்தில் டான்ஸ் ஆடும் இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது திறமையை பல விதங்களில் வெளிப்படுத்தி வருகிறார். அதாவது அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர் ஆனவர் தற்போது நடிகராகவும் ஆகிவிட்டார். இப்போது ஒரு  பாட்டுக்கு டான்ஸ் ஆட உள்ளார் யுவன்.
'மெட்ரோ' படத்தில் அறிமுகமான சிரிஷ் அடுத்து நடிக்கும் படம் 'ராஜா ரங்குஸ்கி'. இப்படத்தின் ஹீரோயினாக சாந்தினி நடிக்கிறார். அனுபமா குமார், சத்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். பர்மா படத்தை இயக்கிய 'தரணிதரன்' இப்படத்தை இயக்குகிறார். அவரே வாசன் புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கிறார். யுவன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
 
இந்தப் படத்தின் ப்ரொமோஷனுக்காக ஒரு பாடலுக்கு இசை அமைத்து தானே பாடிய அவரையே, ஆட வைத்தால் என்ன என்று  முடிவு செய்தார்கள். தனக்கு ஆட வராது என்று முதலில் மறுத்தார். பின்னர் யுவன் பின்னர் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக  முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டு ஆடியுள்ளார். இந்தப் பாடலை தனியாக விழா நடத்தி வெளியிட தயாரிப்பு தரப்பு ஏற்பாடு  செய்து வருகிறது.