1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2016 (13:52 IST)

மலையாளத்தில் வரலட்சுமிக்கு கிடைத்திருக்கும் பாராட்டு

மலையாளத்தில் வரலட்சுமிக்கு கிடைத்திருக்கும் பாராட்டு

தமிழ் சினிமாவில் போட போடி என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின் மதகஜராஜா என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.


 


அந்தப் படம் முடிந்து சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் திரைக்கு வராமலே இருக்கிறது. 
 
இதனிடையே பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை என்ற படத்தில் சூறாவளி என்ற கதாபாத்திரத்தில் ஆட்டக்கார பெண்ணாக தனது நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவனிக்க வைத்தார். ஆனால், தமிழ் இயக்குனர்களின் பார்வை வரலட்சுமி மீது படவில்லை.
 
மலையாள அறிமுக இயக்குனரான நிதின் ரெஞ்சி பணிக்கர், மம்மூட்டியை நாயகனாக வைத்து ’கசாபா’ என்ற படத்தில் வரலட்சுமியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
 
நேற்று வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றுள்ளது. படத்தில் மம்மூட்டுக்கே சவால் விடும் கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்திருக்கிறார். இப்படத்தில் தமிழில் கிடைக்காத பாராட்டுகள் வரலட்சுமியின் மிரட்டலான நடிப்புக்கு கிடைத்து வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்