செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 29 ஜூன் 2017 (13:47 IST)

2.0 பட விளம்பரத்துக்காக வானில் பறந்த 100 அடி ராட்சத பலூன்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - சங்கர் கூட்டணியில் உருவான திரைப்படம் 2.0 படம். சுமார் ரூ.400 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தின் புரொமோஷன் பணிக்காக அப்படக்குழுவினர் உலகம் சுற்ற தயாராகிவிட்டனர்.

 
இப்படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன்  நடிக்கிறார். இசை ஏ.ஆர். ரகுமான். 2.0 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிவருவதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன.
 
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள '2.0' பட புரொமோஷன் நிகழ்ச்சி மூலம் உலகளவில் கவனம் ஈர்க்கும் விதமாக அங்குள்ள ஹாலிவுட் ஸ்டுடியோவில் ரஜினி-அக்ஷய் குமாரின் புகைப்படங்கள் கொண்ட 100 அடி ராட்சத பலூன், விளம்பரத்துக்காக வைக்கப்பட்டுள்ளன. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஓர் இந்திய படத்தை விளம்பரம் செய்வது இதுவே முதல்  முறையாகும்.

 
2.0 பட விளம்பரத்துக்காக லண்டனில் பறக்கவிடப்பட்டுள்ள இந்த ராட்சத பலூனை துபாய், சான் பிரான்சிஸ்கோ, தெற்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என உலகம் முழுவதும் பறக்கவிடவும் தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்  கூறுகின்றன.