புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (08:39 IST)

எனக்கு திருமூர்த்தியும் ஒன்றுதான்… சங்கர் மகாதேவனின் மகனும் ஒன்றுதான் – இமான் பேச்சு !

சீறு படத்தின் பாடல் விழாவில் பேசிய இசையமைப்பாளர் டி இமான் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் இசையமைப்பாளர்களில் ஒருவர் இமான். தற்போது ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்திற்கு இசையமைத்து வருகிறார் அவர். இந்நிலையில் அவர் இசையமைத்த சீறு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த படத்தில் அவர் பார்வை திறனற்ற பாடகரான திருமூர்த்தி என்பவரை அறிமுகப் படுத்தியுள்ளார்.

திருமூர்த்தி இமான் இசையில் வெளியான கண்ணானே கண்ணே பாடலை சமூக வலைதளங்களில் பாடி புகழ்பெற்றவர். அதையடுத்து தனது இசையில் பாடும் வாய்ப்பை இமான் அவருக்குக் கொடுத்தார். இந்நிலையில் சீறு படத்தில் இடம்பெற்றுள்ள பாடலும் ஹிட் ஆகியுள்ளதால் திருமூர்த்திக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் பேசிய இமான்’ எனக்கு எல்லா பாடகர்களும் ஒன்றுதான். திருமூர்த்தியும் ஒன்றுதான் சங்கர் மகாதேவனின் மகனும் ஒன்றுதான்’ எனக் கூறியுள்ளார்.