1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (08:14 IST)

'இமைக்கா நொடிகள்' படத்திற்கு திடீர் சிக்கலா? அமெரிக்காவில் காட்சிகள் ரத்து

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கிய 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் நேற்றிரவே அமெரிக்காவில் பிரிமியர் காட்சிகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சற்றுமுன் அமெரிக்காவில் உள்ளவர்கள் பதிவு செய்த டுவீட்டுகளில் இருந்து 'இமைக்கா நொடிகள்' படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு பணம் திருப்பி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கேடிஎம் ரிலீஸ் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தயாரிப்பு தரப்பில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்சனை இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சென்னை உள்பட தமிழக திரையரங்குகளில் முன்பதிவுகள் நடந்து கொண்டிருப்பதால் இந்த படம் இன்று தமிழகத்தில் ரிலீஸ் ஆகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாராவின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்த படம் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் ரிலீஸ் ஆகவேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்த படம் ரிலீஸ் ஆவது குறித்த உறுதியான தகவல் இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும்

நயன்தாரா, அதர்வா, ராஷிகண்ணா, விஜய்சேதுபதி, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.