செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 24 ஜூன் 2020 (20:32 IST)

பிரபல நடிகரின் படத்திற்கு தடை… ரசிகர்கள் அதிர்ச்சி

இயக்குநர் ஆசிக் அபு இயக்கத்தில் பிரித்விராஜ் நடிக்கும் வரலாற்றுப் படம் வாரியம் குன்னன். இப்படம் 1921 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மலபார் புரட்சியின் பின்னணியில் உருவாகிறது.

இந்நிலையில், இப்படத்தில்  சக்கிப்பரம்பன் வாரியம் குன்னத்து குஞ்ஹம்மது ஹாஜி என்ற மாவீரனின் கதாப்பாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்கவுள்ளார்.

அடுத்தாண்டு இப்படம் தொடங்கவுள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், இப்படம் தொடங்கும் முன்னமே இப்படத்தை நிறுத்தும்படி அரசியல்வாதிகளிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளதாகவும் இப்படத்திற்கு எதிர்புகள் கிளம்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.