திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 2 பிப்ரவரி 2019 (09:12 IST)

'இளையராஜா 75' டிக்கெட் விலை இவ்வளவா?

சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள ’இளையராஜா 75‘ நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை நிர்ணயம் குறித்த விவரம் 
 
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை சாதனைகளை பாராட்டும் வகையில், ’இளையராஜா 75‘ என்ற பெயரில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்றும் நாளையும் கலைவிழா நடைபெற உள்ளது.  தயாரிப்பாளர் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை  செய்துள்ளது.
 
இளையராஜா 75  நிகழ்ச்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  தொடங்கி வைக்கிறார். இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பல்வேறு நடிகர் நடிகைகளும் பங்கேற்கிறார்கள். விழாவையொட்டி இரண்டு நாட்கள் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
பிரபல டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளத்தில் இளையராஜா 75  நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை ரூ. 590 முதல் ரூ. 25000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் டிக்கெட் விலை ரூ. 1180 முதல் 25000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2வது நாள் டிக்கெட் விலை ரூ. 590 முதல் 25000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.