1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (08:56 IST)

” உயிர்த் தோழனே”… இளையராஜாவை வாழ்த்தி பாரதிராஜா பகிர்ந்த வைரல் புகைப்படம்!

இளையராஜா சமீபத்தில் திருக்கடையூர் கோயிலில் சதாபிஷேக பூஜை செய்தது இணையத்தில் வைரலானது.

தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கோயிலில் நேற்று இசைஞானி இளையராஜாவுக்கு அவரது குடும்பத்தினர் சதாபிஷேக பூஜை செய்தனர். இந்த பூஜையின் போது கோயில் கொடிமரத்தின் அருகே இளையராஜா கோ பூஜை மற்றும் கஜ பூஜை செய்தார். அதைத் தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் இளையராஜாவின் நெருங்கிய நண்பரான இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் கலந்துகொண்டார்.

இந்நிலையில் இப்போது இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர் “வாழ்க.. என்றும் வளமுடன்.. என்றும் வாழ்கவே.. உயிர் தோழனே...” என்று வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.