1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 6 ஜூலை 2019 (12:10 IST)

யாராவது கேள்விகேட்டால் வச்சி சாத்திபுடுவேன்; வில்லியாக மாறிய வனிதா

பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளில் எப்பவும்போல ஏதாவது ஒரு சண்டை வருவதுண்டு அதேபோல ரேஷ்மாவுக்கும் மதுமிதாவுக்கும் சண்டை வருகிறது. இது எதற்காகவென்றால் ரேஷ்மா ஓட்ஸ் கஞ்சி செய்ய, அதை பிடிக்காத மதுமிதா தினமும் ஓட்ஸ் கஞ்சியே செய்றாங்க இது  எனக்கு பிடிக்கல என்று சேரனிடம் சொல்கிறார்.
இதை கேட்ட ரேஷ்மா அவர் கேங் முன்னிலையில் ஏதாவது செய்துகொடுத்தால் நல்ல இருக்கிறது என்று சொல்வதை விட்டு குறை மட்டும்  வந்துடுவாங்க சொல்வதாக கூறுகிறார். அதை கேட்ட மதுமிதா எனக்கு பிடிக்கவில்லையே தவிர நல்ல இல்லை என்று சொல்லவில்லை என்று  கூறுகிறார்.
 
மோகன் வைத்யா அதாவது இந்த வார கேப்டனிடம் சென்று முறையிடும் மதுமிதா எனக்கு பழைய சாதமாக இருந்தாலும் பரவாயில்லை எடுத்து வைக்க சொல்லுங்க. எனக்கு ஓட்ஸ் கஞ்சி பிடிக்கவில்லை என்று கூறுகிறார். இந்த பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வருகிறது.
இதன் பிறகு நாமினேஷன் செய்யப்பட்ட 7 ஹவுஸ்மேட்டில் ஒருவரை நீங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி கடிதத்தை சாண்டி படித்ததும் போட்டியாளர்களும் அதிர்ச்சி ஆகின்றனர்.
 
இதில் 8 பேர் கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒன்று கூடி பேசுகின்றனர். அங்கு அனைவரும் மதுமிதாவை வெளியேற்ற  திட்டமிடுகின்றனர், உடனே சாண்டிக்கு பிக்பாஸிடமிருந்து கன்பெக்ஷன் ரூம்மிக்கு வரும்படி சாண்டிக்கு அழைப்பு வருவதையடுத்து, இந்த அறிவிப்பு பிராங் என கூறுகிறார் பிக்பாஸ். மேலும் நீங்க எல்லோரும் சேர்ந்து மீராவை பிராங் செய்யவேண்டும் என்று கூறுகிறார். 
வெளியே வந்த சாண்டியும் பிக்பாஸ் வீட்டில் உள்ள அதாவது இதை நாமினேஷனில் உள்ளவர்கள் என்று இல்லாமல் ஒருவரை எலிமினேஷன் செய்யவேண்டும் என்று கூறுகிறார், இதனை கேட்ட பிக்பாஸ் போட்டியாளர்களும் என்ன இது பிக்பாஸ் இப்படி செய்கிறார் எனக் கூறிகின்றனர்.  சாண்டியும் மீராவை தவிர்த்து அனைத்து ஹவுஸ்மேட்ஸ் இடமும் நாம் அனைவரும் சேர்ந்து மீராவை எலிமினேட் செய்வது போல பிராங்  செய்ய வேண்டும் என்று கூறுகிறார். 
 
ஒவ்வொருவராக வந்து யாரை ஏன் நாமினேட் செய்யவேண்டும் என்ற காரணத்தை கூறவேண்டும். அதன்படி ஒவ்வொருவராக மீரவை நாமினேட் செய்கின்றனர். ஆனால் கவின் சரவணனையும், மதுமிதா கவினையும் நாமினேட் செய்கின்றனர். மேலும் ரேஷ்மா பற்றியும்  குறையாக கூறுவதை பிடிக்காத ரேஷ்மா, என்னமா நடிக்கிறா மதுமிதா என்று கூறுகிறார்.
 
மீராவை வேளியேற்ற அதிக ஓட்டுகள் வந்ததால் அவரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. எனவே மீராவும் வெளியேற தயாராக அனைத்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸிடமும் கண்ணீர் விட்டு, கட்டி அணைத்து விடைபெறும் நேரத்தில் சாண்டி இது பிராங் என்பதை  தெரிவிக்க, மீராவுக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. இது பெரிய highlight என்னவென்றால், பாத்திமா பாபு மீராவை நாமினேட்  செய்தபோது சொன்ன காரணம் தான். சாவித்திரியையே மிஞ்சிவிட்டார் பாத்திமா பாபு என்றுதான் சொல்லவேண்டும்.
 
ரேஷ்மா மதுமிதா பிரச்சனை ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம், ரேஷ்மாவும் வனிதா தனியாக சமையல் செய்கின்றனர். ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அரட்டை அடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதை பார்த்து கடுப்பான வனிதா சாப்பாடு சரியான நேரத்துக்கு வரவில்லை என்று யாராவது கேள்வி கேட்டால் வச்சி சாத்திபுடுவேன்னு வில்லி ஸ்டைலில் சொல்கிறார் வனிதா. 
இந்த பிரச்சனை ஒருபக்கம் இருக்க மறுபக்கம் மீராவிடம் மதுமிதாவை போட்டு கொடுக்கும் வேலையை பார்க்கிறார் வனிதா. மேலும் சாக்‌ஷி அபிராமி இடையே ஏற்படும் பிரச்சனையிலும் தலையிட்டு ஊதி பெரிதாக்குகிறார். கவின் சாண்டியிடம் மீராவை பற்றி குறை கூறுகிறார்.  முகென் ராவ் மதுமிதாவை குறை சொல்லுகிறார். 
 
இவ்வளவு பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், சாண்டி மாஸ்டரோடு பிறந்தநாள் என்பதால், பிறந்தநாள் பாட்டு சாண்டியோட குழந்தையின்  குரலை கலந்திருந்தது. இதை கேட்ட சாண்டி மாஸ்டர் விடாமல் அழுது கொண்டிருந்தார். பிக்பாஸ் ஸ்கீரின்ல சாண்டி மாஸ்டரோட குழந்தை  அவரோட படத்தை வாக்கி முத்தம் கிடுப்பது போலவும் காண்பித்து, அவரை மட்டும் அல்ல அனைவரையும் அழவைத்துவிட்டார் பிக்பாஸ்.