பாவனா இடத்தில் நான் இருந்திருந்தால் கொலை செய்திருப்பேன்: ரகுல் பிரீத் சிங்
நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் தொல்லை எனக்கு நடந்திருந்தால், அந்த வெறியர்களை கொலை செய்திருப்பேன் என தெலுங்கு முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
நடிகை பாவனாவுக்கு பாலியல் தொலை நடந்த சம்பவம் வெளியானதை அடுத்து திரையுலகில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரைத்தொட்ர்ந்து பல நடிககைகள், தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளியே கூறினார்கள்.
பாவனாவுக்கு நடந்த பாலியல் தொல்லைக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் இதுகுறித்து கூறியதாவது:-
நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் தொல்லை எனக்கு நடந்திருந்தால், அந்த வெறியர்களை கொலை செய்திருப்பேன். நான் அத்லெடிக் வீராங்கனை. உடற்பயிற்சிகள் செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறேன். படப்பிடிப்பில் ஓய்வு கிடைத்தால் உடனே உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று விடுவேன். எனவே என்னிடம் யார் வாலாட்டினாலும் தப்பிக்க முடியாது, என்று கூறியுள்ளார்.