புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 28 மே 2019 (18:07 IST)

அரசியலைத் தாண்டிய நட்புக்கு உதாரணம் ரஜினி - கமல்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ரஜினி, கமல் இருவரும் திகழ்கிறார்கள். பல ஆண்டுகளாக தொழில்முறைப்போட்டிகள் பல இருந்தாலும் கூட இருவரது பரிசுத்தமான அந்நியோன்யமான நட்பு பார்பவர்கள் எல்லோரையும் பொறாமைப்பட வைக்குமளவு இருக்கும்.
கமலுக்கு திரைத்துறைக்குள் அடியெடுத்துவைத்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி விஜய் டிவி கமலுக்கு பிரத்யேகமாக ஒரு விழாவை பிரமாண்டமாக நடத்தியது. தென்னிந்திய அளவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் எல்லோரும் ஆர்வத்துடன் கலந்துகொண்ட விழாவில் பேசிய ரஜினி :  கலைத்தாய் நம்மைக் கைப்பிடித்துக் கூட்டிச் சென்றால்... கமலை மட்டும் இடுப்பில் வைத்துக்கொண்டு செல்கிறாள் என்று சொன்னதுடன் ஒரு பிரபல ஓவியரின் கைவண்ணத்தில் தீட்டிய ஓவியத்தையும் கமலுக்குப் பரிசளித்தார் அவர் மேடையில் பேசியதே அதில் தூரிகையில் தீட்டிய கலைஓவியமாய் மின்னியது.
 
அடுத்து பேசிய கமல்: ரஜினி தன்னைத் தாழ்த்திக் கொண்டு என்னை புகழ்ந்தார். என்னையும் ரஜினியையும் போல் இனியாராவது நண்பர்களாக இருந்திருக்க  முடியுமா? என்று  என்று கூட்டத்தில் கேள்விஎழுப்பிக் கெம்பீரித்தார். நான் இந்தச் சவாலை பின்னுக்கு தள்ளிவிட்டுள்ளேன். என்று சந்தோஷத்துடன் கூறி..ரஜினியை கட்டித்தழுவினார். அரங்கமே இரு திரைஆளுமைகளின் நட்பைக் கண்டு கண்களங்கி நின்று கலைக்குடும்பத்தின் சார்பில் கண்களிலேயே அவர்களுக்கு திருஷ்டி பரிகாரமாய்ச் சுற்றிப்போட்டது.
இதனையடுத்து ரஜினி அரசியல் அறிப்பு வெளியிட்டார். கமல் இன்னும் ஒருபடி முன்னுக்குச் சென்று மக்கள் நீதி மய்யம் என்று கட்சி தொடங்கினார். 
 
மக்களவைத் தேர்தலுக்கு மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்ட கமல் பெருவாரியான மக்களைச் சந்தித்தார். தம் கட்சியையும் பிரபலப்படுத்த விளம்பர யுக்திகளை மேற்கொண்டார்.
 
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கமல் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஆதரவு அளிப்பீர்களா என்று   ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு , எனக்கும் கமலுக்கும் இடயேயான நட்பைக் கெடுத்துவிட வேண்டம் என்று செய்தியாளர்களைக் கேட்டுகொண்டார்.
ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே’’ என்று இந்துக்களின் திட்டுக்களை, வசவுகளைச் சம்பாதித்துக்கொண்டார். ஆனாலும் தனது முதல் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் மூன்றாம் இடத்துக்கு வந்தது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி.
 
 
இந்நிலையில் இன்று போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி பேசினார் . அப்போது அவர் கூறியதாவது :
 
நாளை  மறுநாள் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவுள்ளேன். ஒருமுறை ஆதரவு அலையோ, எதிர்ப்பு அலையோ வீசிவிட்டால் அதை மாற்றுவது கடினம். யாருடையா அலை வீசுகிறதோ அதில் போகிறவர் தான் ஜெயிக்க முடியுமே அல்லாமல் மற்றவர்கள் ஜெயிக்க முடியாது. 
 
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிர்ப்பு அலைகள் நிலவியபோதும் கோதாவரி - கிருஷ்ணா - காவிரி ஆகிய நதிகளை இணைப்பது தொடர்பாக நிதின் கட்காரியின் அறிவிப்பு பாராட்டத்தக்கது. நேரு , இந்திரா, கலைஞர் , எம்ஜி ஆர் ஜெயலலிதா ஆகியோர் போல் வலிமையானவர் மோடி என்று அவர் தெரிவித்தார்.
மக்களை ஈர்க்கக் கூடிய கட்சிக்கு வெற்றி : அப்படி மக்களை ஈர்க்கக்கூடியவர் மோடி. மக்களவை தேர்தலில் பாஜகவிற்குக் கிடைத்த வெற்றி என்பது மோடி என்ற தனிமனிதருக்குக் கிடைத்த வெற்றி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை இருக்கிறது. அதனால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
 
நாளை  மறுநாள் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவுள்ளேன். ஒருமுறை ஆதரவு அலையோ, எதிர்ப்பு அலையோ வீசிவிட்டால் அதை மாற்றுவது கடினம். யாருடையா அலை வீசுகிறதோ அதில் போகிறவர் தான் ஜெயிக்க முடியுமே அல்லாமல் மற்றவர்கள் ஜெயிக்க முடியாது. 
 
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிர்ப்பு அலைகள் நிலவியபோதும் கோதாவரி - கிருஷ்ணா - காவிரி ஆகிய நதிகளை இணைப்பது தொடர்பாக நிதின் கட்காரியின் அறிவிப்பு பாராட்டத்தக்கது. நேரு, இந்திரா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் போல் வலிமையானவர் மோடி என்றும், மேலும், தமிழகத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்ற கமலுக்கு எனது பாராட்டுகள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.