1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 29 மே 2017 (21:13 IST)

திருமணத்திற்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள தயங்க மாட்டேன்: ஸ்ருதி ஹாசன்

திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெற தயங்க மாட்டேன் என ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


 

 
ஸ்ருதி ஹாசனும் லண்டனைச் சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலும் காதலிப்பதாக செய்திகள் பரவியது.விரைவில் இருவரும் திருமண செய்யக்கூடும் என்றும் கூறப்பட்டது. ஆனால் ஸ்ருதி ஹாசன் இதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் அவரது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:-
 
சரியான நேரம் தோன்றும்போது திருமணம் செய்து கொள்வேன். எனக்கேற்ற நபரை சந்தித்தால் திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெற்றுக் கொள்ள தயங்க மாட்டேன், என்று தெரிவித்துள்ளார். தனது அப்பாவை போன்றே மிகவும் மன தைரியம் கொண்டவர் ஸ்ருதி ஹாசன்.