1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 13 மார்ச் 2017 (17:59 IST)

எவ்வளவு திட்டினாலும் விஷாலுக்கு கோபமே வராதாம்…

‘என்னை எவ்வளவு திட்டினாலும் எனக்கு கோபமே வராது’ என நடிகர் சங்க செயலாளர் விஷால் தெரிவித்து உள்ளார்.


 

 
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடித்துள்ள படம் ‘ஜெயிக்கிற குதிர’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஷால், ‘எஸ்.ஏ.சந்திரசேகர், டி.சிவா, தேனப்பன் எல்லாருமே எனக்கு நண்பர்கள் தான். என்னை எவ்வளவு திட்டினாலும் எனக்கு கோபமே வராது.

காரணம், நான் நல்லது மட்டுமே செய்ய ஆசைப்படுகிறேன். என்னைக் கைதுசெய்யச் சொல்லி வெளியான செய்திகளைப் பார்த்து, என்னுடைய பெற்றோர் விழுந்து விழுந்து சிரித்தனர். அவர்களுக்கு காமெடி சேனல் பார்ப்பது போல அந்தச் செய்தி இருந்தது’ என்றார்.