வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (14:13 IST)

இனிமேல் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் - விஷால் பட நடிகர்

lal
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷால் நடித்த சண்டக்கோழி 1 படத்தில் பயமுறுத்தும் வில்லனாக நடித்து அசத்தியவர் மலையாளா நடிகர் லால்.

ஒவ்வொரு படங்களில் சிறப்பாக நடிக்கு அவர், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் சுல்தான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்த  நிலையில், தான் ரம்மி விளம்பரத்தில் நடித்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் லால்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கொரொனா காலத்தில் எனக்கு பண நெருக்கடி இருந்தது. அதனால், ரம்மி பற்றிய விளபரத்தில் நடித்தேன்.  இந்த விளம்பரத்திற்கு அரசும் அனுமதி அளித்தது. ஆனால், தற்போது, சூதாட்டங்களினால் அதிகம்பேர் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர். இது வருத்தம் அளிப்பதாக உள்ளது. அதனால், இனியேல் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க  மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.