வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (10:56 IST)

கோடி ரூபா கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்! – மாளவிகா மோகனன்!

இதுவரை மாளவிகா மோகனனுக்கு சரியான முக்கிய கதாப்பாத்திரங்கள் கிடைக்கவில்லை. சில படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனாலும் படத்தில் அந்த கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை என வருத்தத்தில் உள்ளாராம்.



தென்னிந்திய சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் மாளவிகா மோகனன். 2013ல் பட்டம் போலே என்ற மலையாள படத்தில் அறிமுகமான இவர் மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் ஒரு ப்ளாஷ்பேக் காட்சியில் மட்டும் நடித்திருந்தார்.

பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ், மலையாள படங்கள் சிலவற்றில் நடித்து வருகிறார். ஆனாலும் இதுவரை மாளவிகா மோகனனுக்கு சரியான முக்கிய கதாப்பாத்திரங்கள் கிடைக்கவில்லை. சில படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனாலும் படத்தில் அந்த கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை என வருத்தத்தில் உள்ளாராம் மாளவிகா மோகனன்.

சமீபத்தில் படங்களில் நடிப்பது குறித்து பேசிய அவர் “இனிமேல் எனது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்துள்ளேன். ரூ.500 கோடி வசூலிக்க கூடிய படமாக இருந்தாலும் என கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் அதில் நடிக்க மாட்டேன். படம் வசூலில் சாதனை படைத்தாலும், முக்கியத்துவம் இல்லாத கேரக்டரில் நடித்தால் யாரும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள்” என கூறியுள்ளார்.