திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2017 (18:07 IST)

“நயன்தாரா படத்தை நான் இயக்கவில்லை” - பிரதீப் கிருஷ்ணமூர்த்தி மறுப்பு

‘நயன்தாரா நடிப்பில் ‘யு டர்ன்’ படத்தின் ரீமேக்கை நான் இயக்கவில்லை’ என பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
 
கன்னடத்தில் வெளியான ‘யு டர்ன்’ சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படம். பவன் குமார் இயக்கிய இந்தப் படம், கடந்த வருடம் ரிலீஸானது. ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘ரிச்சி’ படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஹீரோயினாக நடித்திருந்தார். பவன் குமார் தயாரிப்பில் வெளியான இந்தப் படம், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
 
இந்தப் படத்தை, தமிழில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குவதாக கூறப்பட்டது. விஜய் ஆண்டனி நடிப்பில் ‘சைத்தான்’ மற்றும் சிபிராஜ் நடிப்பில் ‘சத்யா’ படங்களை இயக்கியவர் இவர். இந்த ரீமேக்கில் நயன்தாரா நடிப்பதாகவும் கூறப்பட்டது.
 
ஆனால், இந்தச் செய்தியை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி மறுத்துள்ளார். “நான் ‘யு டர்ன்’ படத்தை ரீமேக் செய்ய நினைத்தது உண்மைதான். ஆனால், அதற்குப் பிறகுதான் ‘ஷனம்’ படத்தை ‘சத்யா’வாக எடுத்தேன். எனவே, ‘யு டர்ன்’ ரீமேக் கைவிடப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.