புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (10:18 IST)

என்னன்னமோ உளர்றேன்.. என்னை மன்னிச்சிடுங்க... அஸ்வின் குமார் பேட்டி!

சமீபத்தில் நடந்த ஆடியோ விழாவில் பேசிய அஸ்வின் குமார் எல்லை மீறி பேசியதால் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 
குக் வித் கோமாளி மற்றும் சில தனி ஆல்பங்கள் மூலமாக பிரபலம் ஆனவர் அஸ்வின். இந்நிலையில் இப்போது அவர் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்த படத்தின் அடியோ விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய அஸ்வின் தன்னை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு ஓவராக புகழ்ந்து பேசிகொண்டார்.
 
அதில் நான் இந்த படத்துக்கு முன்னர் 40 கதைகள் கேட்டேன். எல்லா கதைகளிலும் தூங்கிவிட்டேன். இந்த கதை கேட்கும் போது தூங்கவில்லை. அதனால் இதில் நடிக்க ஒத்துக்கொண்டேன் எனப் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு அவரிடம் கதை சொன்ன உதவி இயக்குனர்களை அவமதிக்கும் விதமாக உள்ளதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதோடு முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே இவ்வளவு திமிரா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 
இந்நிலையில் இதற்கு அஸ்வின் வருத்தம் தெரிவித்ததோடு விளக்கமும் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ஆடியோ ரிலீஸின் போது என்ன பேசுறதுன்னு தெரியாம ரொம்ப சந்தோஷத்துல ஏதேதோ பேசிட்டேன். நான் ஆணவமாவும் திமிராவும் பேசல. நான் எனது பேச்சை சரியாக தொடர்புபடுத்தி பேசாததால் என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. என்னுடன் இருந்தவர்களுக்கு நான் எந்த அர்த்தத்தில் பேசினேன் என்பது தெரியும். 
 
அன்று நான் என்னன்னமோ உளர்றேன். என்ன பேசுறதுன்னே தெரியலை. என்னை மன்னிச்சிடுங்கன்னு சொல்லிட்டுதான் மேடையில் இருந்து இறங்கினேன். நான் இன்னும் சினிமாவில் சாதிக்கவே இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி ஆணவத்தில் பேசியிருப்பேன்? அப்படியே, சாதிச்சாலும் எனக்கு ஆணவம்ங்கிறது எப்பவுமே வர்றாது. நான் திமிர் பிடித்தவனும் இல்லை என தெரிவித்துள்ளார்.