1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2017 (11:20 IST)

அதற்கு மறுத்தேன்; இயக்குனர் டார்ச்சர்; விஷால் பட ஹீரோயின் பரபரப்பு!

கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகை மாதவி லதா. தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆன அவர் விஷாலின் ஆம்பள படம் மூலம்  தமிழில் அறிமுகம் ஆனவர். இந்நிலையில் அவர் திரையுலக பயணம் பற்றி கூறுகையில், நடிக்கவேண்டாம் என்று என்  குடும்பத்தார் கூறியதையும் மீறி ஹீரோயின் ஆகாமல் வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டு ஹைதராபாத் வந்து  இரண்டு ஆண்டுகளாக பட வாய்ப்பு தேடினேன்.

 
ஆரம்பத்தில் படவாய்ப்பு கிடைத்ததும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என்னிடம் நல்ல விதமாக பேசினார்கள். நாம்  நட்பாக இருக்கலாமா என்று கேட்டதன் அர்த்தம் புரியாமல் நாம் நல்ல நண்பர்கள் தானே என்று கூறினேன். ஆமாம் ஆனால்  இது வேறு நட்பு என்றார்கள், அதன் பிறகே அர்த்தம் புரிந்து கொண்டு என் நண்பருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். ஆனால்  அது தவறுதலாக என்னை வேறு விஷயத்திற்கு அழைத்த இயக்குனருக்கே சென்றுவிட்டது.
 
நான் அனுப்பிய எஸ்எம்எஸ்ஸை பார்த்த பிறகு படப்பிடிப்பு தளத்தில் என்னை அலட்சியபடுத்தியதோடு, கொடுமைப் படுத்தினார்கள். கேரவனை எடுத்துவிட்டார்கள், ஹோட்டல் அறையை மாற்றிவிட்டார்கள். மரத்தடியில் தான் மேக்கப் போட  வேண்டும் என 55 நாட்கள் என்னை டார்ச்சர் செய்தார்கள்.
 
என் அம்மாவை என்னுடன் வரவிடவில்லை. படப்பிடிப்பு தளத்தில் யாரிடமும் என்னை பேச அனுமதிக்கவில்லை. உதவி இயக்குனர்கள் கூட என்னிடம் மோசமாக நடந்தார்கள். இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டால் அனைத்து வசதிகளும் கிடைக்கும்  என்று உதவி இயக்குனர் ஒருவர் போன் செய்து கூறினார்.
 
நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். இவ்வாறு என மாதவி லதா தெரிவித்துள்ளார்.