வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 26 ஜூலை 2017 (23:46 IST)

எனக்கான ஆண்மகனை கண்டுபிடித்துவிட்டேன். துள்ளி குதித்த ஓவியா

பத்து படங்களில் நடித்தால் கூட கிடைக்காத புகழை பத்தே நாட்களில் பெற்றுவிட்டார் நடிகை ஓவியா. தமிழக இளைஞர்களின் கனவுக்கன்னியாகிவிட்ட ஓவியா இன்றைய நிகழ்ச்சியில் தனக்கான ஆண்மகனை கண்டுபிடித்துவிட்டேன் என்று கூறியது பலரது இதயங்கள் வெடிக்க காரணமாகியது.



 
 
இன்று ஓவியாவும், ஆரவ்வும் மனம்விட்டு பேசி கொண்டிருந்தனர். ஆண்களின் வலிமை, பெண்களின் மென்மை குறித்து விளக்கிய ஆரவ், ஆண்களுக்கு ஆண்டவன் வலிமையை கொடுத்தது பெண்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காகத்தானேதவிர, பெண்களை அடக்கி ஆள இல்லை என்று புதுவித விளக்கத்தை கூறினார்.
 
நீதான் என்னுடைய குரு என்று கூறிய ஓவியா, தன்னை பொருத்தவரை ஆண்மகன் என்றால் வீரமாக இருக்க வேண்டும், தவறை கண்டு பொங்கியெழ வேண்டும், தைரியமாக இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டதாகவும், தனக்கான ஆண்மகனை கண்டுபிடித்துவிட்டதாகவும் கூறினார். அவர் யார் என்பதை இப்போது சொல்ல வேண்டாம் என்று ஆரவ் கூற உடனே ஓவியா, அந்த நபர் வெளியே உள்ளார் என்று கூறி ஆரவ்வையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.