1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 2 நவம்பர் 2016 (13:16 IST)

ஒரு பைசாகூட வாங்கவில்லை; வாங்காத பணத்திற்கு கைதா? - தாணு

திரையரங்க உரிமையாளரிடம் இருந்து தான் ஒரு பைசா கூட வாங்கவில்லை என்று திரைப்பட தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான கலைப்புலி எஸ்.தாணு விளக்கம் அளித்துள்ளார்.
 

 
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்குடியிருப்பு ‘நியூ தியேட்டர்’ உரிமையாளர் சி.டேவிட் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
 
அதில், திரைப்பட தயாரிப்பாளர் தாணு தனக்கு 2 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்றும், ஏற்கனவே 2 லட்சம் ரூபாயும் அதற்குரிய வட்டி தொகையையும் வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை ஏற்காமல் தாணு பணத்தை வேண்டுமென்றே வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்’ என்று கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நேற்று செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி கணேசன், கலைபுலி தாணுவை வருகிற 28ஆம் தேதிக்குள் காவல் துறையினர் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
 
இந்நிலையில், இந்த உத்தரவு குறித்து கூறியுள்ள கலைப்புலி எஸ்.தாணு, 'இது ஒரு பொய்யான வழக்கு. நான் தயாரித்த திருமகன் (2007) படத்தை வாங்கித் திரையிட்டவருக்கும், தற்போது என் மீது வழக்குத் தொடர்ந்துள்ள இந்த திரையரங்க உரிமையாளருக்கும் இடையிலான பிரச்னையில், தேவையில்லாமல் தன்னை இழுத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
 
மேலும், திரையரங்க உரிமையாளரிடம் இருந்து தான் ஒரு பைசா கூட வாங்கவில்லை. எந்த வகையிலும் சம்பந்தமில்லாமல் தன் மீது வழக்குத் தொடரப்பட்டு, கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.