திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (17:57 IST)

பணியில் நீடிக்க விரும்பவில்லை; காரணத்தை வெளியிட்ட தொகுப்பாளர் அர்ச்சனா

காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம், பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பல மேடை நிகழ்சிகள், மற்றும் சின்னத்திரை நிகழ்சிகளை அதிகம் பிசியாகிவிட்டார் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சரிகமப’ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2 தொகுத்து வழங்கி வருகிறார் அவர்.
இவருக்கு திரைப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தும், முன்னணி தொகுப்பாளராக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். கடந்த  சில வருடங்களுக்கு முன் மீண்டும் தொகுப்பாளராக கால் பதித்தார். அந்த வகையில் இவர் தொகுத்து வழங்கிய ‘சரிகமப’ லிட்டில் சாம்ப்ஸ், 'சரிகமப' சீனியர்  உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மீண்டும் இவரை திரும்பி பார்க்க வைத்தது. 
 
மேலும் இவர் பிக் எஃப்எம்மில்(FM)ல் பிக் மேட்னி என்கிற ஷோவையும் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் தற்போது அதில் இருந்து அர்ச்சனா திடீர் என அந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை தற்போது மியூசிக் ஜாக்கி கருண் தொகுத்து வழங்குகிறார்.
 
இந்த நிகழ்ச்சியை இருந்து விலகியது குறித்து அர்ச்சனா கூறுகையில் "நான் நடத்தும் டிவி நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. புதிது புதிதாக செய்ய வேண்டியது இருக்கிறது. குடும்பத்திற்கும் நேரம் வேண்டும். அதனால் தான் ஆர்ஜே (RJ) பணியில் நீடிக்க விரும்பவில்லை. விலகிவிட்டேன்"  என கூறியுள்ளார்.