செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By ஜெ.துரை
Last Modified: புதன், 18 அக்டோபர் 2023 (12:43 IST)

தேசிய விருது எனது அப்பாவுக்கு - ஸ்ரீகாந்த் தேவா!

நான் பெற்ற தேசிய விருதை எனது அப்பாக்கு டெடிகேட் பண்ணுகிறேன் மதுரை விமான நிலையத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி.


டெல்லியில் நடைபெற்ற 69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகளைப் பெற்றுக் கொண்டு இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது,  
இந்த தேசிய விருது கருவறை குறும்படத்திற்காக வழங்கப்பட்டது இந்த விருது வாங்கியதற்கு எங்க அப்பா மிகவும் சந்தோசப்பட்டார். ஜனாதிபதி கையில் இந்த விருது வாங்கியது எனக்கு பெருமையாக உள்ளது. தமிழனாக இந்த விருது வாங்குவதற்கு பெருமையாக உள்ளது. இந்த விருது யாருக்காக டெடிகேட் பண்றீங்க என நேற்று எல்லோரும் கேட்டார்கள் இந்த விருது எங்க அப்பா காக டெடிகேட் செய்கிறேன் என்றார்‌.

எங்க அப்பாவிடம் இல்லாத விருதுகளே இல்லை ஆனால் இந்த விருது அவருக்கு சிறப்பான ஒன்று. நம்ம ரொம்ப ஹார்டுவோர்க்கு பண்ணனும்னா கண்டிப்பா கடவுள் எல்லாத்தையும் நம்ம கையில கொடுப்பாரு.

எல்லா படத்திற்கும் விருது கிடைக்கும் என்று தான் உழைக்கிறோம், எல்லா கலைஞர்களும் தேசிய விருது வாங்க வேண்டும் என்பதுதான் கனவு. 20 படங்களுக்கு மேலாக என்னுடைய படம் பெயர் போட்டு விருதுகளுக்கு சென்றுள்ளது. கருவறை படம் செய்யும் போது விருது கிடைக்கும் என நினைக்கவில்லை என்றார்.