திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (20:29 IST)

அவர் இல்லாமல் வாழ முடியாது : மனம் திறந்த அமலாபால்

அவர் இல்லாமல் வாழ முடியாது : மனம் திறந்த அமலாபால்

நடிகை அமலாபால் சமீபத்தில் தனது கணவர் இயக்குனர் விஜயுடனான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.



விவாகரத்து பெற்ற பின் அவர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கும் போது “நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். மகிழ்ச்சியில் என்பது என் மனதில்தான் இருக்கிறது. வெளியில் இல்லை.

நான் நெடுந்தூரம் செல்ல விரும்புகிறேன். அதையே தற்போது செய்து வருகிறேன். இஷாவில் கற்றுக்கொண்ட யோகா என்னுடைய மனம் மற்றும் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.

என் சகோதரர் அபிஜித் பால் எனக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் இருக்க முடியாது. அதேபோல், அவர் இல்லாமலும் இருக்க முடியாது.

சினிமாவில் நடிக்க வந்தது, திருமணம், விவாகரத்து என, என் வாழ்வில் நடந்தது எல்லாம் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.