சனி, 20 செப்டம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 மார்ச் 2018 (16:40 IST)

கமல் சொன்னால் அதையும் செய்வேன்: சினேகன்

கமல் சொன்னால் அதையும் செய்வேன்: சினேகன்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அதில் கலந்து கொண்ட அனைவருமே கமலுடன் நெருக்கமாக இருந்தாலும் கவிஞர் சினேகன் அவர் ஆரம்பித்த அரசியல் கட்சியிலே சேர்ந்து தன்னுடைய விசுவாசத்தை காட்டியுள்ளார்

கட்சி தொடங்கிய நாளில் சினேகன் பேசிய மேடைப்பேச்சு அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சினேகன், 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் மட்டும் அவரது கட்சியில் இணையவில்லை. அவருடைய கொள்கைகள் எனக்கு பிடித்திருந்தது. குறிப்பாக உலகளாவிய அவருடைய பார்வை என்னை கவர்ந்தது. சினிமாவில் பல புதுமைகளை அவர் செய்தது போல் நிச்சயம் அரசியலிலும் அவர் மாற்றத்தை கொண்டு வருவார்' என்று கூறினார்

கமல் சொன்னால் அதையும் செய்வேன்: சினேகன்
மேலும் கமல் கட்சியில் ஒரு அடிமட்ட தொண்டனாகவே பணிபுரிய தனக்கு விருப்பம் என்றும், அவர் கட்டளையிட்டால் தேர்தல் நிற்கவும் செய்வேன் என்றும் சினேகன் கூறியுள்ளார். ரஜினி உள்பட யார் கட்சி ஆரம்பித்தாலும் கடைசி வரை தனது ஆதரவு கமலுக்குத்தான் என்றும் சினேகன் மேலும் கூறினார்