வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 3 மே 2017 (00:30 IST)

அஜித் படத்தில் நான் வில்லனா? யார் சொன்னது! 'விவேகம்' படத்தின் திடீர் திருப்பம்

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'விவேகம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலை உள்ளது. இந்த படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருவதாக பல மாதங்களாக சொல்லப்பட்டு வருகிறது.



 


இந்த நிலையில் விவேக் ஓபராய் சமீபத்தில் தனது டுவிட்டரில் 'விவேகம்' படத்தில் நான் வில்லனா? யார் சொன்னது? எனது கேரக்டர் வில்லனா? இல்லையா? என்பது கடவுளுக்கும் சிறுத்தை சிவாவுக்கும் மட்டுமே தெரியும். எனக்கு கூட அந்த கேரக்டர் வில்லனா? என்பது தெரியாது' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே மகாபாரதம்' தொலைக்காட்சி தொடரில் பீஷ்மர்' கேரக்டரில் நடித்த ஆரவ் செளத்ரி என்பவர் 'விவேகம்' படத்தில் வில்லனாக நடித்து வருவதாக சில  நாட்களுக்கு முன்னர் வெளிவந்த செய்தியையும், தற்போது விவேக் ஓபராய் வில்லன் இல்லை என்று கூறுவதையும் இணைத்து பார்த்தால் இந்த படத்தின் கேரக்டர்களில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

விவேக் ஓபராய் வில்லன் இல்லை என்றால் அவருக்கு என்ன கேரக்டர் என்று அஜித் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு முடிவு 'விவேகம்' படம் வெளிவந்தால்தான் கிடைக்கும்