ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2017 (22:30 IST)

எஸ்பி பாலசுப்பிரமணியனுக்கு என்ன ஆச்சு? வேகமாக பரவு வதந்தி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கடந்த சில மணிநேரங்களாக ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. 
 
ஆனால் இது வதந்தி என்பதை எஸ்பிபி வீடியோ ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளார். நான் நலமுடன் உள்ளேன். இதுபோன்ற வதந்திகள் எப்படி, எதனால் பரவுகிறது என்று எனக்கு புரியவில்லை
 
நான் தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பில் உள்ளேன். நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளேன். எனது உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.