புதன், 1 பிப்ரவரி 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified வியாழன், 6 அக்டோபர் 2022 (18:23 IST)

பிரபல நடிகை மீது கணவர் போலீஸில் புகார்.,.. நடிகை வீடியோ வெளியீடு

arnav
3 மாதக் கருவைக் கலைக்க  நடிகை திவ்யா ஸ்ரீதர் முயற்சி செய்வதாக  கணவர் அர்னாவ் போலீஸில் புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் அர்ணவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக சீரியல் நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டிருந்த நிலையில்,தற்போது அர்ணவ்  ஆணையகரத்திற்குச் சென்று புகாரளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கேளடி கண்மணி என்ற சீரியல் சீரியலில் நடித்துப் பிரபலமானவர் திவ்யா. இவர் தன் கணவர் அர்ணவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதால், தன் கரு எப்போது வேண்டுமானாலும் கலையலாம் என ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், கணவர் அர்ணவ், 3 மாதக் கருவை கலைக்க திவ்யா தன்   நண்பர் ஈஸ்வருடன் சேர்ந்து முயற்சித்து வருவதாக அவர் ஆவடி  போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்று புகாரளித்துள்ளார். மேலும், தான் வீட்டில் இல்லை என்பதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
.
Edited by Sinoj