1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 1 மே 2017 (07:02 IST)

அனுஷ்காவால் முடியாததை அசத்தலாக செய்து முடித்த ராஜமெளலி: இதுவரை வெளிவராத ரகசியம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜமெளலி, பிரபாஸை அடுத்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டது அனுஷ்காவின் அழகுதான். தேவசேனையை அப்படியே கண்முன் நிறுத்திய ராஜமெளலிக்கும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அனுஷ்காவுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகி|றது.



 


இந்த நிலையில் உண்மையில் 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பின்போது அனுஷ்கா உடல் எடையை குறைக்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார்.  ஒரு யோகா டீச்சராக இருந்தும்  'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக ஏற்றிய உடலை அவரால் குறைக்க முடியவில்லை

இந்த நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த ராஜமெளலி வேறு வழியில்லாமல் குண்டான உடலோடு அனுஷ்கா காட்சிகளை படமாக்கி அதை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக்கிவிட்டாராம். இதுதான் அனுஷ்கா திரையில் ஸ்லிம் ஆக தெரிய காரணம் என்று தெலுங்கு பத்திரிகை ஒன்று ரகசியத்தை வெளியிட்டுள்ளது.