ஹாரிஸுக்கு பதில் ஹிப்ஹாப் ஆதி... ஒரு சேஞ்சுக்குதானாம்
கே.வி.ஆனந்த் படமென்றால் ஹாரிஸ்தான் இசை. ஆனால், கவண் படத்தில் ஹாரிஸுக்கு பதில் ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார் என்றதும் தமிழ்சினிமாவின் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தன.
ஹாரிஸ் டியூன்தர தாமதிக்கிறார், அசிஸ்டென்டைப் போல ஹாரிஸிடம் டியூனுக்காக தயங்கி நிற்க வேண்டியிருக்கிறது, ஹாரிஸ் கடைசியாக இசையமைத்த பாடல்கள் வெற்றி பெறவில்லை.... இப்படியாக கே.வி.ஆனந்த் ஹாரிஸை தவிர்த்ததுக்கு காரணங்கள் சொல்லப்பட்டன. உண்மையான காரணம் என்ன? பத்திரிகையாளர் சந்திப்பில் அதுபற்றி கேட்டேவிட்டனர்.
சும்மா ஒரு சேஞ்சுக்குதான் அவர் இசையமைக்கவில்லை. எங்கள் நட்பு அப்படியேதான் இருக்கு. இப்போதும் ஏதாவது டவுட் வந்தால் ஹாரிஸுக்குதான் போன் அடிப்பேன் என்றார் கே.வி.ஆனந்த்.
அப்போ அடுத்தப் படத்தில் இசை ஹாரிஸ்தான்னு சொல்லுங்க.